Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் அதிகரிக்கும் குப்பைகள் - எச்சரிக்கும் அறிவியல் வல்லுநர்கள்

 விண்வெளியில் அதிகரிக்கும் குப்பைகள் - எச்சரிக்கும் அறிவியல் வல்லுநர்கள்

18 சித்திரை 2023 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 7456


விண்வெளி குப்பைகள் அதிகரிப்பதன் காரணமாக விண்வெளியில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கின்றனர் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள்.
 
பரிணாம வளர்ச்சியடைந்து வரும் அறிவியல் துறை மாற்றங்கள், ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதில்லை. 
 
அதிவேக இணையதள வசதியுடன் உலகை இணைக்கும் பணிகளில் முனைப்பு காட்டுகின்றன வளர்ந்த நாடுகள். 
 
இதற்காக தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த உலக நாடுகள் தொடர்ச்சியாக பல செயற்கைக்கோள்களை அனுப்பி வருகின்றன.
 
இவ்வாறு அதிவேக இணைய சேவையயை வழங்குவதற்காக அனுப்பப்படும் செயற்கைகோள்கள் கீழ்புவி சுற்றுவட்டப்பாதையிலேயே நிலைநிறுத்தப்படுகின்றன. இதனை low Earth orbit (LEO) எனக்கூறுவர். 
 
அந்த வகையில் இந்த வருடம் விண்ணில் செலுத்துவதற்காக ஒன்வெப் நிறுவனத்தின் 550 செயற்கைகோள்கள், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 3,500 செயற்கைகோள்கள், ஸ்டார்லிங்கின் 12,000 செயற்கைகோள்கள, அமேசான் க்யூபர் ப்ராஜக்ட்டின் 3,236 விண்கலங்களையும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்தான் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியலாளர்கள் விண்வெளி குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளனர். உலக நாடுகள் அனுப்பும் செயற்கைகோள்களின் பழுதான பாகங்கள், செயலிழந்த விண்கலன்கள், கைவிடப்பட்ட ஏவுகணை வாகன நிலைகள், விண்கலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திடப்படுத்தப்பட்ட திரவங்கள், திடமான ராக்கெட் மோட்டார்களில் இருந்து எரிக்கப்படாத துகள்கள் விண்வெளிக் குப்பைகள் என்று குறிப்பிடப்படுகிறது.
 
தற்போதைய சூழலில் கீழ்புவி வட்டப்பாதையில் 9,000 செயற்கைக்கோள்கள் இருப்பதாகவும் இது 2030-ம் ஆண்டுக்குள் 6,0000-மாக அதிகரிக்கும் என கூறுகின்றனர் பிரிட்டன் அறிவியலாளர்கள். 
 
மேலும் இவற்றால் ஏற்பட்டிருக்கும் 100 டிரில்லியன் அளவிலான விண்வெளி குப்பைகள் கீழ்புவி வட்டப்பாதையில் சுற்றி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.இந்த விண்வெளி குப்பைகள் காலபோக்கில் ஒன்றோடு ஒன்று மோதி அண்டத்தில் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர் அறிவியலாளர்கள். 
 
கடல்நீரை சுத்திகரிப்பது சாத்தியமாகியிருப்பதை போலவே விண்வெளி குப்பைகளை அண்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான பணிகளை எவ்வாறு செய்ய முடியும் என்பது குறித்த அறிக்கையையும் அரசுக்கு அளித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்