விண்வெளியில் பெரும் கருந்துளை செல்லும் பாதையில் உருவாகியுள்ள நட்சத்திரங்கள்!
13 சித்திரை 2023 வியாழன் 10:26 | பார்வைகள் : 6799
விண்வெளியில் பெரும் கருந்துளை ஒன்று அதிவேகத்தில் செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது செல்லும் பாதையில் நட்சத்திரங்கள் உருவாவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.
கருந்துளை அதிவேகத்தில் செல்லும்போது அது வாயுக்களின் மீது மோதுகிறது. வெப்பமடையும் வாயு பின்னர் குளிரும்போது நட்சத்திரங்களாய் உருமாறுவதாகக் கூறப்பட்டது.
நட்சத்திரங்கள் 200,000 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளன.20 மில்லியன் சூரியன்களுக்கு ஈடான எடை கொண்ட கருந்துளை மூன்று மண்டலங்களின் தொடர்பால் உருவானது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இரண்டு மண்டலங்கள் இணைந்தபோது 2 பெரிய கருந்துளைகள் உருவாகியிருக்கலாம்.
கருந்துளைகள் ஒன்று மற்றொன்றைச் சுற்றிக் கொண்டிருந்திருக்கலாம். அவற்றுக்கு இடையே மூன்றாவது மண்டலம் வந்தபோது ஒரு கருந்துளை விண்வெளிக்குள் எறியப்பட்டிருக்கலாம்.
அது பூமியிலிருந்து நிலவுக்கு 14 நிமிடங்களில் செல்லக்கூடிய வேகத்தில் எறியப்பட்டிருக்கலாம் என்று கூறப்டுகின்றது. கருந்துளையால் பூமிக்கு ஆபத்து ஏதுமில்லை என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.