Paristamil Navigation Paristamil advert login

முதன் முறையாக நிலாவிற்கு பயணம் செய்யும் கனேடியர்!

 முதன் முறையாக  நிலாவிற்கு பயணம் செய்யும்  கனேடியர்!

4 சித்திரை 2023 செவ்வாய் 10:32 | பார்வைகள் : 6801


முதன் முறையாக கனேடியர் ஒருவர் நிலாவிற்கு செல்லும் விண்கலத்தில் இடம்பெற்றுள்ளார்.
 
CF18 விமான விமானியான கேணல் ஜெர்மி ஹான்சன் இவ்வாறு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்அமெரிக்காவின் நாசா மற்றும் கனடிய விண்வெளி ஆய்வு நிலையம் என்பன கூட்டாக இணைந்து இந்த விண்கலத்தை விண்ணுக்கு ஏவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
Artemis II என்ற விண்கலம் எதிர்வரும் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணுக்கு ஏவப்பட உள்ளதுள உள்ளார்.
 
விண்கலத்தில் நான்கு பேர் பயணிக்க உள்ளதாகவும் கிறிஸ்டினா ஹாம்கொக் கோச், விக்டர் க்ளோவர் மற்றும் ரீட் வைஸ்மன் ஆகிய அமெரிக்கர்களும், ஒரு கனடியரும் இந்த பயணத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
 
1972ம் ஆண்டு அப்பலோ விண்கலத்தின் பின்னர் முதல் தடவையாக மனிதர்களுடன் நிலாவிற்கு ஓர் விண்கலம் பயணிக்க உள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
 
கனடாவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவரான ஜெர்மி ஹான்சன் இந்த பயணத்தில் இணைந்து கொள்ள உள்ளார். 
 
Artemis II விண்கலம் நிலவைச் சுற்றி வலம் வரும் எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்