Paristamil Navigation Paristamil advert login

வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு! எங்கு தெரியுமா...? விஞ்ஞானிகள் ஆய்வு

  வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!  எங்கு தெரியுமா...?  விஞ்ஞானிகள் ஆய்வு

28 பங்குனி 2023 செவ்வாய் 07:20 | பார்வைகள் : 5135


பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட உருளைக்கிழங்கு பயன்படும் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.
 
பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செவ்வாய்க் கிரகத்தில் வசிப்பதற்கான ஆய்வுகளை நடாத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும் ஸ்டார்க்ரீட் (StarCrete) என்ற கலவையை உருவாக்க உருளைக்கிழங்கு பயன்படும் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
 
இது விண்வெளி தூசி, உப்பு மற்றும் உருளைக்கிழங்கிலுள்ள மாவுச்சத்து ஆகியவற்றின் சிறப்புக் கலவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
 
மேலும் செவ்வாய்க் கிரகத்திற்கு கனரக பொருட்களை கொண்டு செல்ல இது உதவும் என்று கூறப்படுகிறது.
 
உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, விண்வெளி தூசி மற்றும் உப்பு ஆகியவை மூலம் தயாரிக்கப்படும் கான்கிரீட் ஆனது வழக்கமான கான்கிரீட்டை விட வலிமையானதாகவும் செவ்வாய் கிரகத்தில் குடியேற உதவும் என தெரிவித்துள்ளது.
 
இது சுமார் 32 மெகாபாஸ்கல்ஸ் (MPa) அளவைக் கொண்ட மிக வலிமையுடையது ஆகும்.
 
உருளைக்கிழங்கு மாவுச்சத்தை தீர்மானிக்கும் முன் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கலவை சேர்ப்பை பயன்படுத்தி சோதித்துள்ளனர்.
 
அவர்கள் மனித இரத்தம் மற்றும் சிறுநீரைக் கூட வேற்று கிரக கான்கிரீட்டிற்கான கலவை செய்து பார்த்து முயன்றுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்