வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்கள்!
23 பங்குனி 2023 வியாழன் 06:58 | பார்வைகள் : 5991
நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் VHS 1256 b தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது.
இதில் தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கான தெளிவான கண்டறிதல்களை மேற்கொண்டு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.
நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்பட்ட மூலக்கூறுகளின் மிகப்பெரிய எண்ணிக்கை இது என நாசா தெரிவித்துள்ளது.
VHS 1256 b என பட்டியலிடப்பட்ட இந்த கிரகம் சுமார் பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
"VHS 1256 b என்பது நமது சூரியனில் இருந்து புளூட்டோவை விட அதன் நட்சத்திரங்களிலிருந்து நான்கு மடங்கு தொலைவில் உள்ளது.
இதனால் வெப்டெலஸ்கோப் தெளிவான நீர் ஆதாரங்களை கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கிரகத்தில் துல்லியமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித குல வரலாற்றில் இது முக்கியமான மைல்கள் என தெரிவிக்கப்படுகிறது.