பூமியை போல இரு மடங்கு பெரிய கோள்! நாசா கண்டுபிடிப்பு
13 பங்குனி 2023 திங்கள் 07:19 | பார்வைகள் : 6262
பூமியை போல இரு மடங்கு பெரிய கோளை அமெரிக்க விண்வெளி மையமான நாசா கண்டுபிடித்துள்ளது. சூரிய குடும்பத்தில் பூமி மட்டுமே மனிதர்கள் வாழத்தகுதியானது.
இந்நிலையில் புதிய 'டி.ஓ.ஐ., - 700 இ' கோளில் பூமியை போல உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வாய்ப்பு உள்ளது.
இது அளவில் பூமியை விட 2 மடங்கு பெரியது. இது பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் (ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு) துாரத்தில் அமைந்துள்ளது.
ஒரு கோள் அதன் நட்சத்திரத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பின் அதில் தண்ணீர், பாறை உட்பட உயிரினங்கள் வசிக்க தேவையான அம்சங்கள் இருக்கும் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கை.டெஸ்' செயற்கைக்கோள் மூலம் சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய கோள்களை கண்டறியும் ஆய்வில் நாசா பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.
ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான புதிய கோள் கண்டறியப்படுகிறது.
இதில் பூமியை போன்ற தட்பவெட்ப சூழ்நிலை கொண்ட 'டி.ஓ.ஐ., - 700 ஏ, பி, சி, டி' என நான்கு கோள்களை 2020ல் கண்டறிந்தனர். இவ்வரிசையில் இந்த புதிய 'இ' கோள், சி, டி கோளுக்கு இடையே சுற்றி வருகிறது.