புதிய விண்மீன் திரளை கண்டறிந்த விஞ்ஞானிகள்
25 மாசி 2023 சனி 09:10 | பார்வைகள் : 6267
விண்வெளி தொலைநோக்கி மூலம் பால்வளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு நடத்தினர்.
அதன்போது பிரபஞ்சம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திரளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் அனைத்து நட்சத்திரங்களின் மொத்த எடை சூரியனை விட சுமார் 100 பில்லியன் மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.