வானிலிருந்து பூமி மீது பாய்ந்த மர்மமான பச்சை கோடுகள்.!
18 மாசி 2023 சனி 09:13 | பார்வைகள் : 7121
பூமியை (Earth) சுற்றிப் பல மர்மமான விஷயங்கள் அரங்கேறத் துவங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக ஏலியன்களுடன் (Aliens) தொடர்புடைய சம்பவங்கள் போன்ற நிகழ்வுகள், பூமியில் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அடையாளம் தெரியாத பொருட்கள் வான எல்லைகளில் பார்ப்பது, விசித்திரமான உருவங்களை மக்கள் அடையாளம் காண்பது என்று மர்மமான நிகழ்வுகளின் (Mysterious events) பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
வேற்று கிரக வாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன் உயிர்கள் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி நீண்ட காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது.
இப்படி ஏலியன்கள் இருக்கிறது என்று நம்புவதற்காகப் பல சாத்தியங்களை சதிக்கோட்பாளர்கள் வெளியிட்டதானாலோ என்னவோ, மக்கள் மத்தியில் ஏலியன் குறித்த நம்பிக்கை மற்றும் அச்சம் அதிகமாகக் காணப்படுகிறது.
ஏதேனும், ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தால், அதை உடனே மக்கள் இப்போது ஏலியன் நிகழ்வோடு (Alien events) ஒப்பிட்டுக்கொள்கின்றனர். இப்படி, சமீபத்தில் மிகவும் வினோதமாக அரங்கேறிய நிகழ்வு தான், வானத்தில் தோன்றிய பச்சை ஒளி கோடுகள் (Green light lines).
ஆம், ஹவாயில் (Hawaii) வானத்தில், திடீரென பச்சை நிறத்தில் கோடு கோடாக வண்ண வெளிச்சங்கள் தோன்றி புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த காட்சி கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியது.
இது பார்ப்பதற்கு, வானில் இருந்து யாரோ பூமியை ஸ்கேன் (Scanning earth) செய்வது போல் காட்சியளித்துள்ளது. இதனால், மக்கள் இதை ஏதோவொரு ஏலியன் நிகழ்வு என்று கருதிக்கொண்டனர்.
வானில் இருந்து பூமியைத் திருட்டுத்தனமாக ஏலியன்கள் ஸ்கேன் (Aliens scanning earth) செய்வதாகக் கருதி சிலர் கருத்துக்களை பகிரத் துவங்கியுள்ளனர்.
வானில் இருந்து பூமியில் பாய்ந்த பச்சை நிற கோடுகளை முதலில் கண்டுபிடித்தது ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான National Astronomical Observatory of Japan ஆகும். ஹவாயில் இருக்கும் மௌன்கே என்ற பகுதியில் தான் இந்த விசித்திரமான பச்சை நிற கோடுகள் தெரிந்துள்ளது.
ஜப்பான் ஆராய்ச்சி மையத்தின் டெலஸ்கோப் மூலம் இந்த பச்சை நிற கோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில், இருக்கும் உண்மையை ஆராய்ந்த பொது மற்றொரு திடுக்கிடும் தகவல் கண்டுபிடிக்கப்பட்டது.
விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள், முதலில் இதை, NASA-வின் ICESAT-2/43613 செயற்கைக்கோளின் லேசர் வெளிச்சம் என்று கருதினார்கள்.
இந்த செயற்கைக்கோளானது பூமியின் சமநிலை, தரை மட்டத்தை அளவிட்டு ஆராய்வதற்காக இது போன்ற லேசர் ஒளியை பயன்படுத்துவது வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஹவாய் பகுதியில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் நாசாவின் செயற்கைகோள் (NASA satellite) அந்த பகுதியின் மேல் பறக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அப்படியானால், இந்த ஒளி எங்கிருந்து வந்தது? யார் இதைப் பூமி நோக்கிப் பாய்ச்சியது என்று தீவிரமாக விசாரிக்கப்பட்டது. இறுதியில், இந்த மர்மமான ஒளிக்கு பின்னணியில் சீனா இருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவிற்கு (China) சொந்தமான செயற்கைக்கோளின் லேசர் கருவியாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பூமியின் தரை மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கணக்கிடும் சீன சாட்டிலைட்டின் லேசர் வெளிச்சங்களாக (Green laser lights falls from sky) இவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இறுதியில், இது சீன செயற்கைக்கோளில் இருந்து வெளி வந்த லேசர் ஒலிகளின் கோடுகள் என்று கூறப்பட்டுள்ளது.
ஏலியன் நிகழ்வுகள் என்று மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது சீனாவுக்குச் சொந்தமான செயற்கைக்கோள் ஒளி தானா? என்ற கேள்விக்கு இன்னும் சீனா பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பூமியில் இதுவரை பதிவாகியுள்ள ஏலியன் நிகழ்வுகளின் எண்ணிக்கை சுமார் 3,00,000 லட்சத்தை தாண்டுகிறது என்று தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று குறிப்பிடுகிறது.
சீனாவின் உறுதியான பதிலுக்காக இப்போது காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.