Paristamil Navigation Paristamil advert login

சூரிய வெடிப்பு தொடர்பில் அறிவியலாளரின் விளக்கம்

சூரிய வெடிப்பு தொடர்பில் அறிவியலாளரின் விளக்கம்

16 மாசி 2023 வியாழன் 13:54 | பார்வைகள் : 6194


சூரியன் வெடித்து அதன் பகுதியை இழந்தது உண்மையா? சூரிய காற்று என்றால் என்ன? இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என எளிமையாக விளக்குகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் அறிவியலாளர் த.வி. வெங்கடேஸ்வரன்.
 
சூரிய வெடிப்பு, சூரிய காற்று என்பதை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'விண்வெளி வானிலை' என்ற அம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
சமீப காலமாக அதாவது ஒரு பத்தாண்டு காலங்களாக விண்வெளி வானிலை என்பதை நாம் கவனித்து வருகிறோம். 
 
அதாவது பூமியில் வானிலையை கணிப்பது போல விண்வெளியின் வானிலையை கவனித்து வருகிறோம்.
 
சூரிய வெடிப்பு, சூரிய காற்று என்பதை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'விண்வெளி வானிலை' என்ற அம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
சமீப காலமாக அதாவது ஒரு பத்தாண்டு காலங்களாக விண்வெளி வானிலை என்பதை நாம் கவனித்து வருகிறோம். 
 
அதாவது பூமியில் வானிலையை கணிப்பது போல விண்வெளியின் வானிலையை கவனித்து வருகிறோம்.
 
.சூரிய காற்று (solar wind என்று ஆங்கிலத்தில் சொல்கின்றனர்), சுமார் 200 கிமீ per sec - லிருந்து 400 கிமீ per sec வேகத்தில் ஒரு க்யூபிக் சென்டிமீட்டரில் சுமார் 3 லிருந்து 10 அயனிக் துகள்கள் (மின்னேற்றம் இருக்கக்கூடிய துகள்கள்) கொண்டு இந்த காற்று வெளியாகிறது. 
 
இது சூரியனுடைய வெளிமண்டலமான கரோனாவில் உருவாகிறது. அங்கிருந்து நாலா பக்கமும் வீசுகிறது. இது வழக்கமான ஒன்று.
 
2. சூரிய பிழம்பு (solar flare) அது அவ்வப்போது வெடிக்கும். அவ்வாறு வெடிக்கும்போது மின்காந்த அலைகள் (electro magnetic waves) வெளியே வரும்.
 
 அது எந்த இடத்தில் வெடிக்கிறதோ அங்கிருந்து அம்புபோல அது புறப்பட்டு வெளியே வரும். எனவே அது நாலா புறமும் இருக்காது. ஆனால் அந்த திசை பூமியை நோக்கி இருந்தால் பூமியை நோக்கி வரும் இல்லையென்றால் பூமிக்கு அருகில் வராது எனவே பூமிக்கு பாதிப்பு இருக்காது.
 
3. சூரிய வெடிப்பு என்று சொல்லக்கூடிய கரோனல் மாஸ் எஜக்ஷன். 
 
இதிலும் அயனிக் துகள் வெளியே வரும். இப்போது 3000 கிலோ மீட்டர் per sec வேகத்தில் வரும். 
 
அதாவது அதன் அடர்த்தியில் பார்த்தால் அதாவது ஒரு சதுர செண்டி மீட்டரில் பார்த்தால் 300லிருந்து 500 துகள்கள் வரை இருக்கும். இதுவும் எங்கே வெடிக்கிறதோ அந்த திசையை நோக்கிதான் வரும். எல்லா திசைகளிலும் பரவாது.
 
இது சூரியனின் மூன்று இயக்கங்கள். சூரிய காற்று என்பது இந்த அயனிக் துகள்கள் நான்கு திசைகளில் சென்று கொண்டிருக்கும். 
 
சூரிய பிழம்பு என்று சொல்லக்கூடியது ஒரு ஃபிளாஷ் லைட்டை போன்று ஏற்படக் கூடியது. 
 
இந்த சூரிய வெடிப்பு என்பது, ஒரு பபுள் தண்ணியில் மேலே வந்து வெடிப்பது போல சூரியனின் மேற்புறத்தில் ஒரு குமிழியை போல வெடித்து மேகத்தை போல வெளியே வரும். இதைத்தான் அவர்கள் சூரியன் வெடித்து ஒரு பகுதி வெளியேறி விட்டது என்கின்றனர். 
 
சூரியனை பொறுத்தவரை இது ஒரு இயல்பான நிகழ்வுதான் ஆனால் தினமும் நடைபெறும் ஒரு விஷயமன்று.
 
இதை விண்வெளி மற்றும் பூமி என இரண்டுக்கும் கருதலாம்.
 
விண்வெளியில் இப்போது செயற்கைக்கோள்களை வைத்திருக்கிறோம். 
 
அங்கே மின்னணு கருவிகள் இருக்கும். அந்த மின்னணு கருவிகள் மீது இந்த அதிதீவிர மின்காந்த அலைகளோ அயனித் துகள்களோ பட்டால் அந்த கருவிகள் பழுதடைந்துவிடும். 
 
எனவே அது வரக்கூடிய சமயங்களில் அந்த திசையில் இருக்கக்கூடிய செயற்கைக் கோள்களை நிறுத்தி வைப்பார்கள். விண்வெளியை பொறுத்தவரை, அந்த நேரத்தில் விண்வெளி நிலையத்துக்கு வெளியே விண்வெளி வீரர்கள் 'ஸ்பேஸ் வாக்' செல்ல மாட்டார்கள்.
 
ஆனால் பூமியை பொறுத்தவரை, 99.99 சதவீதம் எதுவும் நடக்காது. அதிகபட்சமாக சிற்றலைகளில் தடங்கல்கள் ஏற்படும்.
 
அதேபோல இந்த வெடிப்பு தீவிரமாக வந்தது என்று சொன்னால் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் ட்ரிப் ஆகலாம். எனவே மின்தடங்கல்கள் ஏற்படலாம்.
 
இதை தவிர பார்த்தால் துருவ ஒளி இந்த சமயத்தில் அதிக பிரகாசமாகவும், அதிக இடங்களிலும் தெரியும். மனிதர்களுக்கோ அல்லது வேறு உயிரினங்களுக்கோ இதனால் எந்த பாதிப்பும் இல்லை.
 
பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 9.18 மணியளவில் சூரியனின் '3217' என்கிற பகுதியில் ஒரு பிழம்பு வெடித்தது. 
 
எட்டு நிமிடங்களில் அது தென் ஆப்ரிக்காவில் தாக்கியது. இதை x க்ளாஸ் என்று சொல்வார்கள். இது ABC என்ற வகை அளவில் மிகவும் மிதமானது. இதற்கு அடுத்ததாக M க்ளாஸ் - அதாவது நடுத்தரமாக இருக்கும்.
 
X க்ளாஸ் என்பது தீவிரம். அந்த தீவிரத்தை ஒன்றிலிருந்து ஆறு வரை அளவு வைத்திருப்பார்கள். 
 
அதன்படி இது கீழ் மட்டத்தில்தான் உள்ளது. இருப்பினும் X க்ளாஸ் என்பது மிகவும் அரிது. அன்றைக்கு மட்டுமே C மற்றும் M க்ளாஸில் 15 வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அதுகுறித்து நாம் எதுவும் பேசவில்லை.
 
தென் ஆப்ரிக்காவை தாக்கியது X க்ளாஸ் என்ற அரிதான விளைவு என்பதால் அது குறித்து அதிகம் பேசப்பட்டது.
 
சூரிய புள்ளிகள் (sun spots) எத்தனை உள்ளது என்பதை பொறுத்துதான் இந்த வெடிப்பு மற்றும் பிழம்பு நிகழும்.
 
சூரியனின் இயக்கம் என்பது 11 ஆண்டுகளில் ஊசலாடக்கூடியது. இப்போது ஏறுமுகத்தில் இருக்கிறோம். 2020-ல் குறைவான நிலையில் இருந்தது. 2024 வாக்கில் வாக்கில் உச்சத்தை எட்டும். 2032 மீண்டும் தாழ்நிலைக்கு சென்றுவிடும்.
 
அதாவது உச்சத்துக்கு மிக பக்கத்தில் இருக்கிறோம். எனவே சூரியப் புள்ளிகள் அதிகரிக்கும் அதனால் அடுத்த வரக்கூடிய பல மாதம் இம்மாதிரியான அதிக செய்திகளை நாம் கேட்போம். ஏனென்றால் புள்ளிகள் அதிகரிக்கும்போது வெடிப்பும் பிழம்பும் அதிகரிக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்