பூமியை நெருங்கும் பிரம்மாண்ட சிறுகோள்.. மோதும் அபாயம்
14 மாசி 2023 செவ்வாய் 15:07 | பார்வைகள் : 6367
சூரியனை சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றுவது போல பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும் பல சிறு கோள்களும் விண்கற்களும் கடந்து செல்கின்றன. இத்தகைய சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லும் போது அரிதாக பூமி மீது மோதுவதும் உண்டு. பெரும்பாலும் இவை வளிமண்டலத்திற்கு முன்பே சிதைந்து விடக்கூடும்.நாம் வாழும் இந்த பூமியாக இருக்கட்டும்.
சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களாக இருக்கட்டும் பல்வேறு பேரதிசயங்களை கொண்டது. கற்பனையால் கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு பேரதிசயங்கள் இந்த பிரபஞ்சம் உள்ளடக்கியது. சூரியக்குடும்பத்தில் எப்படி ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றதோ அது போல சிறுகோள் எனப்படும் ஆஸ்ட்ராய்டுகளும் சூரிய குடும்பத்தின் உட்புற பகுதியில் சூரியனை சுற்றி வருகிறது.சூரியனை நீள்வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றி வருகின்றன.
அதேபோல் சிறுகோள்கள், தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டுதான் உள்ளது.
இந்த சிறுகோள்கள், விண்கற்கள், தூசுகள் போன்றவை சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கான காலம் வேறுபட்டதாகும். சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் போன்றவை ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுகிறது என்றால், தொலைவில் உள்ள வால் நட்சத்திரங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே கூட சுற்றுகின்றன. அதாவது சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ளும் வால் நட்சத்திரங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
சூரியனை சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றுவது போல பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும் பல சிறு கோள்களும் விண்கற்களும் கடந்து செல்கின்றன. இத்தகைய சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லும் போது அரிதாக பூமி மீது மோதுவதும் உண்டு. பெரும்பாலும் இவை வளிமண்டலத்திற்கு முன்பே சிதைந்து விடக்கூடும். இந்த நிலையில், பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் பெரிய அளவிலான ஒரு சிறுகோள் நுழைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
199145 (2005 YY128) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் சுமார் ஒரு கி.மீட்டர் அளவுக்கு அகலம் கொண்டது என்றும் கூறியுள்ள வானியல் ஆய்வாளர்கள், அடுத்த வாரம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மோதலாம் என்றும் எச்சரித்து இருந்தனர். இந்த சிறுகோளானது 1,870 முதல் 4,265 அடிகள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமான கோல்டன் கேட் பாலத்தை விட பெரியது என்று டெய்லி ஸ்டார் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சிறுகோள் பூமியில் இருந்து 45.06 கி.மீட்டர் தொலைவிற்கு நெருங்கி வரக்கூடும் எனவும் இது பூமியின் சுற்றுவட்ட பாதையில் மோதுமா என்பது பற்றியோ ..இதனால், பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்த தகவலை விஞ்ஞானிகளால் கூற முடியவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூறியிருந்தனர். பொதுவாக 82 அடிகளுக்கும் குறைவான சிறிய விண்கற்கள் எதுவும் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. பெரும்பாலும் இவை வளிமண்டலத்திற்குள் நுழையும் போதே எரிந்து சிதைந்துவிடும்.
அதையும் தாண்டி பூமியின் மேற்பரப்புக்கு வந்தாலும் கூட எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருந்தாலும் 199145 (2005 YY128) என்ற சிறுகோள் அளவில் சற்று பெரியதாகும். எனவே அது பூமியின் வளிமண்டலத்திற்குள் அது நுழையும் பட்சத்தில், அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை எங்களால் சொல்ல முடியாது விஞ்ஞானிகள் சொல்லும் தகவலாக இருந்தது.
இதனிடையே இந்த சிறுகோள் ஆனது எந்த பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது வரும் 15-16 ஆம் தேதிக்குள் பூமியை கடந்து செல்லும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் நாளை இரவு நேரத்தில் நமது பூமியை கடந்து செல்லுமாம். டெலிஸ்கோப்ஸ் மூலமாக இதை பார்க்க முடியும் என்று கூட சொல்லியிருக்கிறார்கள். டெலிஸ்கோப்ஸ் மூலமாக இந்த மிகப்பெரிய விண்கல்லை துறை சார்ந்த நிபுணர்கள் ஏற்கனவே பார்த்துள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள கோல்ட்ஸ்டோன் ஆண்டனா மூலமாக 2005 YY128 சிறுகோளின் ரேடார் இமேஜ்களை பெறும் முயற்சியிலும் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் பூமிக்கு நெருக்கமாக 2023 BU என்ற சிறுகோள் வந்து சென்றது. அதாவது கடந்த மாதம் 27 ஆம் தேதி தென் அமெரிக்காவின் தென்முனை பகுதிக்கு மேலே சுமார் 3540 கி.மீட்டர் தொலைவிற்கு கடந்து சென்றது.