பூமியின் சுழற்சி மாற்றம்.. அழிவை ஏற்படுத்துமா....?
4 மாசி 2023 சனி 17:31 | பார்வைகள் : 6576
பூமி ஒரு அதிசயம், இதில் இருக்கும் மர்மங்க்ள் பல இன்னும் ஆராய்ச்சியில் தான் உள்ளது.
மர்மங்களை அறியும் முயற்சியின் போதே பூமி அழியும் என்ற பேச்சு உருவாகியது.
இன்னும் சொல்லபோனால் நம் வாழ்நாளில் அடிக்கடி உலகம் அழியது என்ற பேச்சை நிச்சயம் கேட்டு இருப்போம்.
2012 மறக்க முடியுமா... இந்த வருடம் உலகம் அழிய போகுது என்ற பயத்துடனே மக்கள் நகர்ந்த நாட்கள்.
2012 என திரைப்படமும் கூட வெளியாகி உள்ளது.
பொழுதுபோக்கு முதல் பயமாக மாறும் முக்கியமாக விடயம் ஆகும்.
இதன் காரணம் பூமி நம்மை போன்ற அனைத்து ஜீவராசிகளின் ஒரே வீடு.
இந்த வீடு இல்லாமல் போனால் என்ன வேறு கிரகம் பார்த்து கொள்ளலாம் என சிலர் ஆராய்ச்சியில் குதித்துள்ளனர்.
எப்படி பார்த்தாலும் பூமி அழிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் எல்லோரின் மனதிலும் இருக்கும்.
பூமி சூரியனை சுற்றி தன்னை சுற்றி கொண்டு வரும் என்பது நாம் அனைவரும் அறிந்தது.
ஒருவேளை இதன் சுழற்சி என்றாலோ அல்லது எதிர்திசையில் சுழன்றால் பிரளயம் ஆகும்.
பூமி அழிவு குறித்து அறிவதற்கு முன்னால் நாம் இதன் சுழற்சி பற்றி பேசுவோம்.
பூழியை சுற்றி ஒரு காந்த ஈர்ப்பு உள்ளது. இந்த ஈர்ப்பு மூலமாக தான் பூமி ஒரே திசையில் சீராக சுழற்கிறது.
ஆனால் பூமியின் சுழற்சி மாறப்போவதாக அறியப்பட்டுள்ளது.
ஜனவரி 23, 2023 அன்று பூமியின் சுமற்சி திசை மாறப்போவதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் அறிந்துள்ளதாக நேச்சர் ஜியோசைன்ஸ் (Nature Geoscience) அறிக்கை வெளியிட்டது.
பூமி மைய சுமற்சி காரணமாக மேற்பரப்பு நிலைத்தனமை பெறும்.
ஒவ்வொரு 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சுழற்சி திசை மாறும். மேலும் இந்த மாற்றம் சுமார் 17 ஆண்டுகள் நடக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் நிலநடுக்கம் வருமா... பூமி வெடிக்குமா... என்ற பயம் தேவையில்லை.
இந்த சுழற்சி மாற்றத்தால் பூமிக்கும் பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கு இந்த ஆபத்தும் வராது.