விண்ணில் பாயவிருந்த நாசாவின் ”ஸ்பேஸ் எக்ஸ் கேப்சூல்”! மோசமான வானிலையால் தாமதம்
15 கார்த்திகை 2020 ஞாயிறு 04:47 | பார்வைகள் : 9175
ரெசிலியன்ஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ட்ராகன் கேப்சூலைப் பயன்படுத்தி நாசா முதன்முதலாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது.
இந்த கேப்சூலில் 3 அமெரிக்க வீரர்களும் ஒரு ஜப்பானிய வீரரும் விண்வெளி மையத்துக்குச் செல்லவுள்ளனர்.
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 7.27க்கு புறப்படவிருந்த கேப்சூல், அமெரிக்க நாட்காட்டிபடி, ஞாயிற்றுக்கிழமை மாலை 7.27க்கு புறப்படவுள்ளது.
வெப்பமண்டல புயல் காரணமாக புளோரிடா மீது கடுமையான, கடலோர காற்று வீசக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பே இந்த தாமதத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த ராக்கெட் விண்வெளி மையத்தை அடைய 8 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.