Paristamil Navigation Paristamil advert login

70 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம்

70 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம்

5 ஐப்பசி 2020 திங்கள் 18:25 | பார்வைகள் : 9218


 அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெடிக்கும் நட்சத்திரத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

 
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இன்று நாம் பூமியை தாண்டியும் அதிசயங்களை நிகழ்த்தி வருகிறோம். அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமல்லாமல் கடந்த கால நிகழ்வுகளையும் NASA கண்டறிந்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் ஹப்பிள் தொலைநோக்கி லென்ஸ் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வெடிக்கும் நட்சத்திரத்தின் அதிசய வீடியோவை பகிர்ந்துள்ளது. சில நொடிகளில் அந்த நட்சத்திரம் வெடித்து ஒன்றுமில்லாமல் போவதை இந்த வீடியோ காட்டுகிறது. வீடியோ ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான புகைப்படங்களை காட்டுகிறது, மேலும் நட்சத்திரம் அதனை சுற்றியுள்ள ஒவ்வொரு வான் பொருளிலும் பிரகாசமாக ஜொலிப்பதை காணலாம். இது இறுதியில் ஒரு சிறிய புள்ளியாக மாறி பிறகு எதுவும் இல்லாமல் மங்கிவிடுகிறது.
 
"இந்த வீடியோ தெற்கு விண்மீன் தொகுப்பான புப்பிஸில் 70 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள சுழல் விண்மீன் NGC 2525 ஆல் பெரிதாக்கப்பட்டுள்ளது. இது நமது பால்வீதியின் அரை விட்டமாக உள்ளது, இதை பிரிட்டிஷ் வானியலாளர் வில்லியம் ஹெர்ஷல் 1791 இல் "சுழல் நெபுலா" என்று கண்டறிந்தார். தற்போது நாசா பகிர்ந்துள்ள வீடியோ விளக்கத்தை காணவும்.
 
இந்த வெடிக்கும் நட்சத்திரம் 'Type Ia' சூப்பர்நோவா என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் இது ஒரு வெள்ளை குள்ள அண்டை நட்சத்திரத்திலிருந்து பெரிய அளவிலான பொருட்களை சேகரித்ததன் விளைவாக தோன்றியுள்ளது. இது ஒரு வெள்ளை, குள்ள மற்றும் ஒரு அடர்த்தியான நட்சத்திரமாகும். ஒரு சூப்பர்நோவா என்பது ஒரு சக்திவாய்ந்த மற்றும் பிரகாசமான நட்சத்திர வெடிப்பு ஆகும், இது ஒரு பெரிய நட்சத்திரத்தின் கடைசி பரிணாம நிலைகளில் நிகழ்கிறது.
 
பெரும்பாலான சூப்பர்நோவாக்கள் பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்கின்றன, மேலும் இவ்வளவு தொலைவில் நடக்கும் வானியல் நிகழ்வுகள் பொதுவாக மிகவும் மேம்பட்ட தொலைநோக்கிகள் மூலம் கூட கண்டறிய மிகவும் கடினம் என்பதால் வானியலாளர்கள் இந்த படத்தை கண்டு பாராட்டினர்.
 
இந்த நிகழ்வின் மகத்துவத்தை புரிந்து கொள்ள, இது 70 மில்லியன் ஒளி ஆண்டுகள் முன்பு நடந்திருந்தாலும், மனிதர்கள் பூமியில் தோன்றாத போது இந்த வெடிக்கும் செயல்முறை நடந்தது என்று நாம் கூறலாம்! வீடியோவின் கீழ் உள்ள சிலர் சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். டைனோசர்கள் பூமியில் நடந்து செல்லும்போது இந்த நிகழ்வு தொடங்கியது என்று சிலர் கூறினார்கள்.இந்த நட்சத்திரம் விண்மீன் NGC 2525 லிருந்து வருகிறது, இது பால்வீதியின் பாதி விட்டம் கொண்டது. வானியலாளர்கள் பொதுவாக பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதத்தை அளவிட ஒரு சூப்பர்நோவாவை பயன்படுத்துகிறார்கள். சூப்பர்நோவா அதன் பிரகாசத்தைப் போலவே தூரத்தை அளவிட ஒரு மார்க்கராக செயல்படுகிறது, வானியலாளர்கள் அதன் ஹோஸ்ட் விண்மீனின் தூரத்தை கணக்கிடுகிறார்கள்.
 
தொழில் நுட்பத்தை ஆக்கபூர்வமாகவும் பின் வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாகவும் மாற்றுவதில் வானியல் வல்லுநர்களுக்கு பொறுப்பு உள்ளது. அண்டம் சார்ந்த கண்டுபிடிப்புகள் இதோடு நின்றுவிடுவதில்லை என்பது நாம் அறிந்ததே!.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்