2024ல் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடும் நாசா!
23 புரட்டாசி 2020 புதன் 06:48 | பார்வைகள் : 9255
2024 ஆம் ஆண்டில் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் லேண்டரை உருவாக்க மூன்று வெவ்வேறு திட்டங்கள் போட்டியில் உள்ளதாகவும் இதற்கு ஆகும் செலவு 28 பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல் தவணையாக 3.2 பில்லியன் டாலருக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாக பிரிடென்ஸ்டைன் கூறினார்.