Paristamil Navigation Paristamil advert login

வெள்ளி கிரகத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு..!

வெள்ளி கிரகத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு..!

18 புரட்டாசி 2020 வெள்ளி 09:47 | பார்வைகள் : 9191


பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் ஏதேனும் இருக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 
சூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகத்தைப் பற்றிய ஆய்வில் Jane Greaves என்ற இங்கிலாந்து விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டபோது வெள்ளி கிரகத்தின் அமில மேகங்களில் இருந்து பாஸ்பீன் வாயுவின் தடயத்தை கண்டுபிடித்தனர்.
 
நிறமற்றதும், எளிதில் தீப்பிடிக்கக் கூடியதும், துர்நாற்றம் அடிக்கக் கூடிய இந்த வாயு, ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் 3 மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் உருவாகும் வாயுவாகும்.
 
எனவே வெள்ளி கிரகத்தில் இந்த வாயு இருப்பதன் மூலம் ஹைட்ரஜன் இருப்பதும் உறுதியாகி உள்ளது. மனிதர்கள் உயிர் வாழ ஹைட்ரஜன் வாயுவும் தேவை என்பதால உறுதியாக வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்