Paristamil Navigation Paristamil advert login

மணிக்கு 24ஆயிரம் மைல் வேகத்தில் வரும் விண்கல்! இன்று பூமியை கடக்கிறது

மணிக்கு 24ஆயிரம் மைல் வேகத்தில் வரும் விண்கல்! இன்று பூமியை கடக்கிறது

14 புரட்டாசி 2020 திங்கள் 06:52 | பார்வைகள் : 9559


விண்ணில் இருந்து மணிக்கு 24ஆயிரம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ராட்சத விண்கல் பூமியை இன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
2020 QL2  என்று பெயர் கொண்ட இந்த விண்கல் 390 அடிக்கும் மேலான விட்டம் உடையது என்றும் 2 கால்பந்தாட்ட மைதானங்களை ஒன்றிணைத்தது போன்று அளவில் பெரியதாக இருக்கும் என்றும்  கூறப்படுகிறது. இந்த விண்கல் பூமியை 4.2 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த விண்கல் பூமியை கடந்து செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் விண்கல் பூமியை நெருங்கும் நிகழ்வு இது 3வது முறையாகும்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்