பூமியில் பிரகாசமான பொருளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
13 ஆவணி 2020 வியாழன் 17:05 | பார்வைகள் : 9376
ஒளிரும் மூலக்கூறுகள் மங்குவதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சியில், 'பூமியில் பிரகாசமான பொருளை' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒளிரும் மூலக்கூறுகள் திட நிலைக்கு மாற்றப்படும்போது அவை மங்கல் அடைகின்றன. இதனை தடுப்பதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் ஒளிரும் மூலக்கூறுகள் இப் புதிய வடிவத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
SMILES எனப்படும் இப் புதிய பொருள் திடமான ஒளிரும் தன்மையைக் கொண்டதாக காணப்படுவதுடன் நீண்டகால பிச்சினைக்கு தீர்வை வழங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியானா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இனைந்து இப் புதிய பிரகாசமான பொருளை உருவாக்கியுள்ளனர்.
நிறமற்ற, நட்சத்திர வடிவ மூலக்கூறுடன் வண்ண சாயத்தை கலப்பதன் உருவாக்கப்படும் இவ் ஒளிரும் பொருள் உருவாக்கப்படுவதன் இது மூலக்கூறுகள் தொடர்புகொள்வதைத் தடுப்பதன் மூலம் அவை தொடர்ந்தும் பிரகாசமாக இருக்க அனுமதிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இத் தொழில்நுட்பத்தை சூரிய ஆற்றல் மற்றும் தகவல்களை சேமிக்க பயன்படுத்தலாம் என அவர்கள் தெரிவிக்கினறனர்.