செவ்வாய் கிரகத்துக்கு தியான்வென் 1 என்ற முதல் ரோவரை வெற்றிக்கரமாக அனுப்பிய சீனா
23 ஆடி 2020 வியாழன் 12:40 | பார்வைகள் : 9045
சீன விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல்லாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் தியான்வென் 1 ரோவர்,வெற்றிக்கரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து மார்ச் 5 ஒய் 4 ராக்கெட் மூலம் தியான்வென் -1 ரோவரை அதன் சுற்றுப்பாதைக்கு சீனா அனுப்பியது.
7 மாத விண்வெளி பயணத்துக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு தியான்வென் 1, செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்றும், அதன் பிறகு கிரகத்தின் ஆய்வு தரவுகளை வழங்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வரும் 30 ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா விண்கலன் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.