இன்று வானில் நிகழ்ந்த புற நிழல் சந்திர கிரகணம்..!
5 ஆடி 2020 ஞாயிறு 15:11 | பார்வைகள் : 8998
இன்று நிகழ்ந்த புற நிழல் சந்திர கிரகணம் வட, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தெரிந்தது.
இந்த ஆண்டு ஏற்கனவே ஜனவரியிலும், கடந்த மாதமும் சந்திர கிரகணங்கள் ஏற்பட்ட நிலையில் இன்று இந்த ஆண்டின் மூன்றாவது சந்திரகிரகணம் ஏற்பட்டது.
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவை மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமியின் மைய நிழல் நிலவை முழுமையாக மறைக்கும்போது முழு சந்திரகிரணமும், பகுதியளவு மறைக்கும் போது பகுதி சந்திரகிரகணமும் ஏற்படுகிறது.
புற நிழல் சந்திர கிரகணம் என்பது பூமியின் முழு நிழல் பகுதிக்கும் சூரியனின் வெளிச்சம் படும் பகுதிக்கும் இடையே ஏற்படும் மெல்லிய அல்லது புறநிழல் பகுதியில் நிலவு செல்லும்போது ஏற்படுகிறது.
இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் இன்று காலையில் ஏற்பட்டதால் இந்தியாவில் தெரியவில்லை. அதேசமயம் வட, தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரம் என்பதால் தெரிந்தது.