Paristamil Navigation Paristamil advert login

திடீரென்று மாயமான இராட்சத நட்சத்திரம்! குழப்பத்தில் விஞ்ஞானிகள்

திடீரென்று மாயமான இராட்சத நட்சத்திரம்! குழப்பத்தில் விஞ்ஞானிகள்

2 ஆடி 2020 வியாழன் 07:25 | பார்வைகள் : 9011


அவதானிக்கப்பட்டு வந்த இராட்சத நட்சத்திரம் ஒன்று திடீரென காணாமல்போயிருப்பது வானியலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தத் தொலைதூர நட்சத்திரம் ஒரு சுப்பர் நோவாவாக வெடிக்காமல் கருந்துளை ஒன்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என்பது பற்றி அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
 
அது உண்மையாயின் பெரிய நட்சத்திரம் ஒன்று இந்த வகையில் வாழ்வை முடித்துக் கொண்ட முதல் உதாரணமாக அமையும். எனினும் இதற்கு வேறு சாத்தியங்களும் இருக்கக் கூடும் என்று இந்த ஆய்வு பற்றிய விபரத்தை வெளியிட்டிருக்கும் வானியல் சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நட்சத்திரம் கின்மான் பால்மண்டலத்தில் சுமார் 75 மில்லியன் ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது. இது எமது சூரியனை விடவும் சுமார் 2.5 மில்லியன் மடங்கு ஒளிரக் கூடியது.
 
2001 தொடக்கம் 2011 வரை இந்த நட்சத்திரம் பற்றி பல வானியலாளர் குழுக்களும் பல ஆய்வுகளை மேற்கொண்போதும் 2019இல் இது பற்றி ஆய்வு மேற்கொள்ள அயர்லாந்தின் டப்லின் டிரினிட்டி கல்லுௗரி முயன்றபோது நட்சத்திரம் காணாமல்போயுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்