மனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி!
31 வைகாசி 2020 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 9241
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாசா விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹென்கென் ஆகியோரை புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சுற்றுப்பாதையில் சேர்ப்பதற்கான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம், கடந்த புதன்கிழமை மோசமான காலநிலையால் நிறுத்தப்பட்டது.
தற்போது இதற்கான இரண்டாவது முயற்சியை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன.
கடந்த 2011ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி விண்கலங்கள் ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப முதல் தடவையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதால், அவர்களின் பணியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது ஒரு குழுவினரை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல ஒரு தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.