Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்!

7 பங்குனி 2020 சனி 12:16 | பார்வைகள் : 12274


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை தாங்கிச் செல்லும் டிராகன் கார்கோ (Dragon cargo) விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, ஆயிரத்து 950 கிலோ எடையுள்ள பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்த விண்கலம், அங்கிருந்து ஆய்வு பொருட்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.
 
டிராகன் கார்கோவின் கடைசி விண்வெளி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்