Paristamil Navigation Paristamil advert login

முதன் முறையாக பூமிக்கு வெளியே உள்ள பால்வீதியில் ஒட்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு!

முதன் முறையாக பூமிக்கு வெளியே உள்ள பால்வீதியில் ஒட்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு!

23 மாசி 2020 ஞாயிறு 12:22 | பார்வைகள் : 9459


பூமியிலிருந்து கால் பில்லியன் ஒளி ஆண்டிற்கு அப்பால் உள்ள பால் வீதி ஒன்றில் ஒட்சிசன் இருப்பது முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் இந்த ஒட்சிசன் ஆனது மூலக்கூற்று வடிவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஒட்சிசன் ஆனது அண்டவெளியில் அதிகமாக காணப்படும் வாயுக்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
முதல் இடங்களில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்பன காணப்படுகின்றன.
 
இந்நிலையில் பூமியின் பால்வீதிக்கு வெளியே உள்ள மற்றுமொரு பால்வீதியில் ஒட்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது உயிரினங்கள் பூமிக்கு வெளியே இருக்கக்கூடிய சாத்தியம் தொடர்பான ஆய்வுகளை மேலும் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்