Paristamil Navigation Paristamil advert login

வெள்ளி, துணைக் கோள்கள் குறித்து ஆராய நாசா திட்டம்

வெள்ளி, துணைக் கோள்கள் குறித்து ஆராய நாசா திட்டம்

16 மாசி 2020 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 11996


வெள்ளி உள்ளிட்ட கோள்கள் குறித்து புதிய பரிமாணத்தில் ஆராய்ந்து விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் புதிய முயற்சியில் நாசா களமிறங்கியுள்ளது.
 
வெள்ளி, வியாழனின் துணைக்கோளான ஐஓ, நெப்டியூனின் துணைக்கோளான ட்ரைடெண்ட் ஆகியவற்றை ஆராய 4 புதிய திட்டங்களை நாசா வகுத்துவருகிறது. வெள்ளி கிரகத்துக்கு இரண்டு ஆராய்ச்சிக்குழுவும் மற்ற இரண்டிற்கும் தலா ஒரு ஆராய்ச்சி குழுவும் நியமிக்கப்படவுள்ளது.
 
இதுவரை கண்டிராத விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் விதமான பல்வேறு யோசனைகளை அறிக்கையாக தயார் செய்து வழங்க கேட்டுக்கொண்டுள்ள நாசா, அதற்காக தலா 9 மாதங்கள் கால அவகாசமும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 21 கோடி நிதியும் ஒதுக்கவும் முடிவுசெய்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்