Paristamil Navigation Paristamil advert login

தக்காளி பேஷியல் ஸ்க்ரப்

தக்காளி பேஷியல் ஸ்க்ரப்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 13467


 கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் ப்ளீஸ்... 

 
உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. இந்தத் தக்காளி பேஸ்ட். 
 
உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டீஸ்பூன், 
தக்காளி விழுது - அரை டீஸ்பூன் 
 
இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். 
 
ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்கதாவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். 
 
ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்