Paristamil Navigation Paristamil advert login

ஆகாயத்தில் ஆபத்தை விளைவித்த ட்ரோன் விமானம்!

ஆகாயத்தில் ஆபத்தை விளைவித்த ட்ரோன் விமானம்!

29 ஐப்பசி 2018 திங்கள் 11:31 | பார்வைகள் : 8549


ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
எனினும் சில நாடுகள் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பிரதேசங்களில் ட்ரோன் விமானத்தை பறப்பில் ஈடுபடுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
 
இத் தடையை மேலும் வலுவாக்கும் வகையில் தற்போது பாரிய விபத்து ஒன்றினை ட்ரோன் விமானம் ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது மணிக்கு 238 மைல்கள் எனும் வேகத்தில் பறந்துகொண்டிருந்த ட்ரோன் ஆனது மற்றுமொரு விமானத்தின் இறக்கையுடன் மோதி பாரிய சேதத்தினை விளைவித்துள்ளது.
 
எனினும் இவ் விபத்தான ஆராய்ச்சியாளர்களால் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ட்ரோன் விமானம் ஒன்று பாரிய வேகத்தில் சென்று ஏனைய விமானங்களுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை அறிவதற்காகவே இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.
 
இந்த ஆய்வினை University of Dayton Research Institute (UDRI) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.