சூரியனுக்கு மிக அருகில் செல்ல ஆயத்தமாகும் விண்கலம்...!!
12 ஆவணி 2018 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 8746
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் Parker Solar Probe விண்கலத்தை நாளை செலுத்தவுள்ளது.
விண்வெளி பற்றி பல ஆராய்ச்சிகளை செய்து வரும் நாசா, சூரியன் பற்றி அறிந்து கொள்ள Parker Solar Probe என்ற விண்கலத்தை அனுப்பவுள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியக்காற்றை முதன்முதலில் கண்டறிந்த விஞ்ஞானி EUGENE PARKER பெயரிலேயே இதற்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சூரியனின் கொரோமா வளிமண்டலத்துக்குள் சென்று அதன் கூறுகளை பற்றி ஆய்வு செய்யும் நோக்கில் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் மூன்று மாதங்களில் சூரிய சுற்று வட்டப்பாதையை அடையும் இந்த விண்கலம், ஏழு ஆண்டுகள் பயணித்து சூரியனிலிருந்து 40 லட்சம் மைல் தொலைவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.