Paristamil Navigation Paristamil advert login

விண்வெளி கெப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கியுள்ள இஸ்ரோ ஆய்வு மையம்!

விண்வெளி கெப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கியுள்ள இஸ்ரோ ஆய்வு மையம்!

5 ஆவணி 2018 ஞாயிறு 15:19 | பார்வைகள் : 8348


 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்காக பயன்படுத்தப்படும் விண்வெளி கெப்ஸ்யூல் என்ற இயந்திரத்தை இஸ்ரோ ஆய்வு மையம்  சொந்தமாக தயாரித்து இன்று சோதனை செய்தது. 

 
விண்வெளிக்கு சென்ற விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கும், ரொக்கெட் விண்வெளிக்கு செல்லும்போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிக்கவும் விண்வெளி கெப்ஸ்யூல் இயந்திரத்தை இஸ்ரோ ஆய்வு மையம் உருவாக்கி உள்ளது. 
 
இந்த இயந்திரமானது அனைத்து காலநிலைகளையும் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த விண்வெளி கெப்ஸ்யூலை சொந்தமாக உருவாக்கவுள்ளதாக  2 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 
 
அதன்படி  விண்வெளி கெப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
 
பூமியில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்ட சோதனைகள் விரைவில் நடத்தப்படும். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்