Paristamil Navigation Paristamil advert login

15 ஆண்டுகளின் பின் பூமியை நெருக்கும் செவ்வாய் கிரகம்

15 ஆண்டுகளின் பின் பூமியை நெருக்கும் செவ்வாய் கிரகம்

1 ஆவணி 2018 புதன் 08:38 | பார்வைகள் : 9226


 பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும்.

 
அதன்படி இந்த மாதம் 27ம் திகதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.
 
பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கி.மீ. தூரத்தில் சுழலும் இன்று பூமிக்கு 5 கோடியே 76 லட்சம் கி.மீட்டர் நெருக்கத்தில் வருகிறது. எனவே, செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கியது. இருந்தாலும் டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்கும் காட்சியை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் கிரிப்த் வானிலை ஆய்வு மையம் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கி.மீ. தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்