செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பட்ட பிரம்மாண்டமான ஏரி!
29 ஆடி 2018 ஞாயிறு 03:16 | பார்வைகள் : 8963
செந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர்.
செவ்வாய் கிரகத்திலன் தென் பகுதியில் உள்ள மூடுபனிப் பகுதிக்கு கீழே இந்த ஏரி காணப்படுகின்றது.
European Mars Express எனும் செயற்கைக் கோளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஏரியானது 20 கிலோ மீற்றர்களாக இருப்பதுடன், மூடு பனி மேற்பரப்பிலிருந்து 1.5 கிலோ மீற்றர் ஆழத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இப் பகுதியில் உள்ள காலநிலையை ஆராய்ந்து பார்க்கும்போது நுண்ணங்கிகள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.