நட்சத்திரம் விட்டு விட்டு ஒளிர்வதன் காரணம் என்ன?
22 ஆடி 2018 ஞாயிறு 10:18 | பார்வைகள் : 9362
ஒவ்வொரு நட்சத்திரமும் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கக் கூடும்.
முன்னர் அருகிலுள்ள இரு கோள்கள் மோதுவதால் உண்டாகும் சிதைவுகளை நட்சத்திரமானது வழுங்குவதால் அவை அவ்வாறு தோன்றுகின்றன என விஞ்ஞானிகள் நம்பியிருந்தனர்.
இக் கருத்து நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது.
இது சிறிய நட்சத்திரம், 430 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ளது. RW Aur A என்றழைக்கப்படும் இந் நட்சத்திரம் 1937 ஆம் ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சில தசாப்தங்களுக்கும் இது வியப்பான விடயங்களை காட்டிக்கொண்டிருக்கிறது.
இது ஒவ்வொரு தடவையும் பிரகாசமாக மாறுவதற்க முன்னர் மங்குகிறது.
அண்மித்த காலங்களில் இந் நிகழ்வு அடிக்கடி நிகழ்வதுடன், அது நீடித்த காலம் நிலைத்திருந்ததையும் அவதானிக்க முடிந்திருந்தது.
தற்போது அதிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அது ஏன் மங்குகிறது என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்துகின்றது.
அதன்படி நட்சத்திரத்தினை அதன் ஒழுக்கில் சுற்றிவரும் பாரிய திணிவுகள் மோதியிருக்கக் கூடும், இதன் போது உருவாகிய சிதைவுகள் அவற்றின் சிறு திணிவு காரணமாக ஈர்ப்பு சக்தியின் விளைவாக நட்சத்திரத்தினை நோக்கி விழுங்கப்பட்டிருக்கலாம், இதன் போது உண்டாகும் முகில் காரணமாகத்தான் அவை தற்காலிகமாக மறைக்கப்படுகின்றன, நமக்கு அவற்றின் பிரகாசம் குறைந்து மங்குவது போல தோன்றுகிறது என்கின்றனர்.