குண்டு கன்னங்கள் வேண்டுமா?
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9236
ஓட்டிப்போன கன்னங்களை புஸ் புஸ் ஆக்குகிறது தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள்.
ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழை பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர, குஷ்பு கன்னங்கள் கிடைக்கும்.
நாற்பது வயதை நெங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்து விடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு.
தக்காளி விழுது, பாதாம் விழுது... தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள் இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது.