ஞாயிறை ஆய்வு செய்வதற்காக தொடங்கிய பயணம்!
11 மாசி 2020 செவ்வாய் 05:22 | பார்வைகள் : 9335
சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தின் கீழ், அதிநவீன கேமிராக்கள், ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய சோலார் ஆர்பிட்டர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை, நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து, அண்டவெளிக்குள் செலுத்தியிருக்கின்றன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து, ஞாயிறு இரவு 11.03 மணிக்கு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சோலோ என சுருங்க அழைக்கப்படும் இந்த சோலார் ஆர்ப்பிட்டர் விண்கலம், சூரியனின் மேற்பரப்பையும், அதில் நிமிடத்திற்கு, நிமிடம் ஏற்படும் மாற்றங்களையும், தெளிவாக படம்பிடிப்பதோடு, அங்கும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் குறித்த ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபடும்.
சூரியனை, அதன் மேற்பரப்பிலிருந்து, 26 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்தவாறு, சோலார் ஆர்ப்பிட்டர் ஆய்வு செய்யும்.