விண்வெளியில் ஈர்ப்பு அலைகள்! ஆய்வுக்காக முதல் செயற்கைக் கோள்
21 மார்கழி 2019 சனி 03:37 | பார்வைகள் : 9366
விண்வெளியில் உள்ள ஈர்ப்பு அலைகள் குறித்த ஆய்வுக்காக முதல் செயற்கைக் கோளை சீனா ஏவியுள்ளது.
பிரேசில் மற்றும் சீனாவைச் சேர்ந்த 8 செயற்கைக் கோள்களுடன் டியான்கின்-1 ராக்கெட், தையுவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
பூமியிலிருந்து 600 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட ஈர்ப்பு அலைகள் ஆய்வு செயற்கைக் கோள் தனது பணியைச் செய்யும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் காணப்படும் வெப்பநிலை மூலம் ஈர்ப்பு அலைகள் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆராயப்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.