விண்ணில் “ரோபோ ஹோட்டல்” துவங்கும் நாசா
7 மார்கழி 2019 சனி 14:44 | பார்வைகள் : 9616
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே ரோபோ ஹோட்டல் ஒன்றை நாசா துவங்க உள்ளது.
ரோபோக்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், உபகரணங்கள் இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 19வது ரீசப்ளை திட்டத்தின் ரிட்ஸ் மூலம் இந்த பிரிவு துவங்கப்பட உள்ளது.
சிறிய எரிகற்கள், கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றிலிருந்து இங்கு சேமிக்கப்படும் கருவிகள் பாதுகாக்கப்படும். சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்படும் கசிவுகளை கண்டறியும் ரெல் எனப்படும் ரோபோக்கள் இரண்டு, முதற்கட்டமாக இந்த பிரிவில் வைக்கப்படவுள்ளன.