சூரியப் புயல் குறித்து எச்சரிக்க உதவுமா அமெரிக்க விண்கலத் தகவல்கள்?

6 மார்கழி 2019 வெள்ளி 03:33 | பார்வைகள் : 12254
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா, சூரியனைப் பற்றிய தகவல்களைத் திரட்ட அனுப்பிய விண்கலம்.
நீண்டகாலமாக விடை தெரியாத சில புதிர்களை விடுவிக்க உதவும் தகவல்களை அது அண்மையில் அனுப்பியுள்ளது.
சூரியக் காற்றலை, விண்வெளி வானிலை ஆகியவை தொடர்பான புதிர்களுக்கு அவை விடை பகரும்.
சூரியனுக்கும், பூமிக்குமான இடைவெளி சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர்.
நாஸாவின் Parker Solar Probe சூரியனுக்கு 24 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு வரை நெருங்கிச் சென்று தகவல் திரட்டியது.
மற்றெந்த விண்கலமும் சூரியனுக்கு அவ்வளவு அருகில் சென்றதில்லை.
அது அனுப்பியுள்ள புதிய தகவல்கள் சூரியப் புயல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் முறையை உருவாக்க ஆய்வாளர்களுக்கு உதவக்கூடும்.
சூரியப் புயல்களால், செயற்கைக்கோள்களின் இயக்கம், பூமியில் மின்னணுச் சாதனங்களின் செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படும்.
Parker Solar Probe விண்கலம், மென்மேலும் சூரியனை நெருங்கித் தகவல் திரட்டும்.
படிப்படியாக சூரியனின் மேற்பரப்புக்கு 6 மில்லியன் கிலோமீட்டர் வரை அது நெருங்கிச் செல்லும்.