பால்வீதியில் புதிய கருந்துளை!
1 மார்கழி 2019 ஞாயிறு 12:40 | பார்வைகள் : 10056
விண்வெளி வீரர்கள் பால் வீதியில் மிகப் பெரிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளனர்.
LB-1 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கருந்துளை பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது.
அதன் எடை சூரியனை விட 70 மடங்கு அதிகம்.
நட்சத்திரங்கள் உருவான விதம் குறித்த தற்போதைய கோட்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் வண்ணம் அது மிகப் பெரிதாக இருப்பதாய்க் கூறப்பட்டது.
பால்வீதியில் சுமார் 100 மில்லியன் கருந்துளைகள் இருப்பதாய் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் LB-1, இதுவரை ஆய்வாளர்கள் சாத்தியம் என்று நினைத்து வந்ததைக் காட்டிலும் இரு மடங்கு எடை கொண்டிருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாகக் கருந்துளைகள் 2 வகைப்படும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
வழக்கமான ரகத்தைச் சேர்ந்த கருந்துளைகள் சூரியனைப் போலக் கிட்டத்தட்ட 20 மடங்கு வரை எடை கொண்டவை; மிகப் பெரிய நட்சத்திரத்தின் நடுப்பகுதி அதற்குள்ளாகவே வெடித்துச் சிதறும்போது ஏற்படக்கூடியவை.
இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த கருந்துளைகள் சூரியனைப் போலக் குறைந்தது ஒரு மில்லியன் மடங்கு எடை கொண்டவை. அவை எவ்வாறு உருவாகின்றன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
LB-1 கருந்துளையை அனைத்துலக விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது. சீனாவின் LAMOST தொலைநோக்கியைப் பயன்படுத்தி அவர்கள் அதனைக் கண்டுபிடித்தனர்.