சூரியனை கடந்து சென்ற புதன்கிரகம் - நாசா வெளியிட்ட காட்சி

13 கார்த்திகை 2019 புதன் 06:16 | பார்வைகள் : 12987
புதன் கிரகம் சூரியனைக் கடந்து செல்லும் அரிய காட்சியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
சூரியனை நேர்கோட்டில் கடக்கும்போது சிறிய அளவிலான கரும்புள்ளி போல புதன் கிரகம் காட்சி அளித்தது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சி அளித்தது.
இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை திங்களன்று நடைபெற்றது. அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் காணமுடியும் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3