விண்வெளி மையதிற்கு சென்றடையும் அதிநவீன சமையல் சாதனம்..!
4 கார்த்திகை 2019 திங்கள் 05:54 | பார்வைகள் : 9253
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கு அனுப்பப்பட்ட அதிநவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது.அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர்.
அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றைத் தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் அவன் ஆகியவை அமெரிக்காவின் வர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து 3.7 டன் எடைகொண்ட சைக்னஸ் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது.
சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைகிறது. அதிகபட்ச வெப்பம், ஈர்ப்பு விசை இல்லாத நிலை ஆகிய சூழல்களில் பிஸ்கட் சுடும்போது, அதன் வடிவம், அமைப்பு ஆகியவை எப்படி இருக்கும் என விஞ்ஞானிகள் ஆராய உள்ளனர். கதிரியக்கத்துக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் உடை மற்றும், ஸ்போர்ட்ஸ் கார் உதிரி பாகங்கள் உள்ளிட்டவையும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.