மென்மையான சருமத்தைப் பெற......
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10066
தினமும் தேன் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதே சமயம் தேனைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவும், மென்மையும் அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆம், தினமும் தேனை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தின் அழகை அதிகரிக்கும்.
உங்களுக்கு தேனை எப்படி தினமும் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
பருக்கள் இருந்தால்... பருக்கள் தான் சருமத்தின் அழகையே கெடுப்பது. அத்தகைய பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம். அதற்கு இரவில் படுக்கும் போது பருக்கள் உள்ள இடத்தின் மீது தேனைத் தடவிக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் தேனுடன், சிறிது டீ-ட்ரீ ஆயில் அல்லது லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்தும் தடவிக் கொள்ளலாம். இதனால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
சிறந்த கிளின்சராக... தேனில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தினமும் கழுவி வருவதும் நல்லது. இதனால் முகத்தில் போடப்பட்டுள்ள மேக்கப் முற்றிலும் நீங்குவதோடு, சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் இது செயல்படும்.
வறட்சியான சருமத்தைப் போக்க... வறட்சியான சருமம் உள்ளவர்கள், தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சியை நீக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முடியும்.