Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள்! குவியும் பாராட்டு

 விண்வெளியில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள்! குவியும் பாராட்டு

24 ஐப்பசி 2019 வியாழன் 11:30 | பார்வைகள் : 8662


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், முதன்முறையாக முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்ட குழு ஒன்று விண்வெளியில் நடந்து பழுதுபார்ப்புப் பணி மேற்கொண்டதைப் பாராட்டியுள்ளார்.
 
அனைத்துலக விண்வெளி நிலைய மின்சாரக் கட்டமைப்பின் உடைந்துபோன பாகத்தை மாற்றிக் குழு வரலாறு படைத்துள்ளது.
 
கடந்த சுமார் அரை நூற்றாண்டில், விண்வெளி நிலையத்துக்கு வெளியே நடந்துசென்று பழுதுபார்ப்பில் ஈடுபட்ட குழுக்களில் ஆண்கள் அறவே இடம்பெறாதது இதுவே முதல் முறை.
 
குழு மேற்கொண்ட முயற்சி தைரியமானது, அசாத்தியமானது எனக் கூறித் திரு. டிரம்ப் பாராட்டினார்.
 
அதற்கு நன்றி கூறிய விண்வெளி வீராங்கனைகள், பல்லாண்டுப் பயிற்சிக்குப் பிறகு தங்களது வேலையைத்தான் செய்ததாக அடக்கத்துடன் குறிப்பிட்டனர்.
 
தங்களது முன்னோடிகளான அனைத்துப் பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோருக்கு அவர்கள் புகழாரம் சூட்டினர்.
 
இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் முதன்முறையாக அமெரிக்கர் ஒருவரை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பும் எண்ணம் கொண்டுள்ளது.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்