நிலவில் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி!
16 ஐப்பசி 2019 புதன் 15:58 | பார்வைகள் : 9534
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சீனாவும் நிலவிற்கு விண்வெளி ஓடத்தினை அனுப்பியிருந்தது.
இதில் புதிய முயற்சி ஒன்றினையும் சீனா மேற்கொண்டிருந்தது.
அதாவது Lunar Micro Ecosystem (LME) எனப்படும் 2.6 கிலோ கிராம் எடை உடைய சிறிய உயிர்க்கோளம் ஒன்றினையும் வைத்து அனுப்பியிருந்தது.
குறித்த உயிர்க் கோளத்தில் பருத்தி விதை, தக்காளி விதை, ஈஸ்ட், பழ ஈக்களின் முட்டை, Arabidopsis thaliana எனப்படும் களை மற்றும் எண்ணெய் வித்துக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த வித்துக்களை நிலவில் முளைக்க வைத்து பார்ப்பதே சீன ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.
எனினும் தற்போது பருத்தி விதை மாத்திரம் முளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் விதையிலிருந்து ஒரு இலை மாத்திரம் வெளிவந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.