சனி கிரகத்தை சுற்றி புதிதாக இருபது நிலவுகள் கண்டுபிடிப்பு!

9 ஐப்பசி 2019 புதன் 16:05 | பார்வைகள் : 13659
சனி கிரகத்தை சுற்றி புதிதாக இருபது நிலவுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸின் ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஷெப்பர்ட் மற்றும் அவரது குழுவினர், சனி கிரகத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றுவட்ட பாதையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிதாக நிலவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சனிக்கிரகத்தில் உள்ள நிலவுகளின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
ஜூபிட்டர் எனப்படும் வியாழன் கிரகத்தில் 79 நிலவுகள் உள்ளன. இதனால், தற்போது சனி கிரகமே அதிக நிலவுகள் கொண்ட கிரகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலவுகள் அனைத்தும் நிலவை சுற்றிவர 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சனியின் 20 நிலவுகளுக்கும் பொதுமக்கள் பெயர் சூட்டலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மக்கள், @SaturnLunacy என்ற டுவிட்டர் பக்கத்தில், #NameSaturnMoons என்ற ஹேஷ்டேக்குடன் தாங்கள் விரும்பும் பெயரை தெரிவிப்பதோடு, அதற்கான விளக்கத்தையும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பெயர்கள் அனைத்தும் இந்தாண்டு டிசம்பர் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3