பெண்கள் மட்டுமே செல்லும் முதல் விண்வெளி பயணம்..!
6 ஐப்பசி 2019 ஞாயிறு 14:18 | பார்வைகள் : 9071
பெண்கள் மட்டும் செல்லும் முதல் விண்வெளி பயணத்தை செயல்படுத்தும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.
1965 ஆம் ஆண்டு தொடங்கிய விண்வெளி பயணத்தில் இதுவரை 213 ஆண்கள் இடம்பெற்ற நிலையில் 14 பெண்கள் மட்டுமே விண்வெளி சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் பெண்கள் மட்டுமே செல்லும் விண்வெளி பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. அந்த முயற்சியை மீண்டும் செயல்படுத்தும் பணியை தற்போது நாசா தொடங்கியுள்ளது. அந்த வகையில் விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச் மற்றும் புதிதாக வந்துள்ள ஜெசிகா மீர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்த மாத இறுதியில் செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
மேலும் அவர்கள் அங்குள்ள சூரிய மின்சக்தி நிலையத்தில் புதிய, மேம்படுத்தப்பட்ட பேட்டரிகளை இணைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரிகளுக்கான 5 விண்வெளி பயணத்தில் இது 4 ஆவது என்றும் பெண்கள் மட்டும் செல்லும் இந்த பயணம் விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்லாக இருக்கும் என்று நாசாவின் துணை தலைமை விண்வெளி வீரர் மேகன் மெக் ஆர்தர் தெரிவித்துள்ளார்.