BLACK HOLE கருந்துளையை படம் பிடித்து சாதனை படைத்த நாசா விஞ்ஞானிகள்!
29 புரட்டாசி 2019 ஞாயிறு 12:34 | பார்வைகள் : 9415
விண்வெளியில் நட்சத்திரங்களை அழிக்கும் BLACK HOLE எனும் கருந்துளையை படம் பிடித்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
375 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கருந்துளையை, நாசாவின் டெஸ் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. கிட்டத்தட்ட சூரியனின் எடையைக்கொண்ட நட்சத்திரம் ஒன்றை, கருந்துளையானது தன்னுள் இழுத்து சிதறடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் அதன் இறுதிக்காலத்துக்குப் பின் கருந்துளைகளாக மாற்றமடையும். அப்போது அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சுற்றி இருக்கும் பொருள்களை தன்னுள்ளே இழுத்து கிரகித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.