விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம்!
25 புரட்டாசி 2019 புதன் 11:09 | பார்வைகள் : 8974
ஜப்பான் இன்று அதன் ஆளில்லா விண்கலத்தை அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது.
ஜப்பான் நேரப்படி பின்னிரவு 1:05 மணிக்கு தனேகாஷிமா (Tanegashima) விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பாய்ச்சப்பட்டது.
இந்த மாதத் தொடக்கத்தில் தனேகாஷிமா நிலையத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்தால் விண்கலத்தை பாய்ச்சும் நடவடிக்கைகள் தாமதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு விண்கலத்தின் மூலம் 5.3 டன் பொருள்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்கலத்தில் உணவு, தண்ணீர், ஆராய்ச்சிக்கு தேவையான பொருள்கள் இருந்தன.