விண்வெளியில் பிடிமானமின்றி உலாவந்த முதல் வீரர் காலமானார்
26 மார்கழி 2017 செவ்வாய் 08:53 | பார்வைகள் : 9497
விண்வெளியில் முதலில் பிடிமானமின்றி உலா வந்த விண்வெளி வீரர் புரூஸ் மெக்கேண்டில்ஸ் காலமானார்.
அவருக்கு வயது 80.
இரு விண்வெளிப் பயணக் குழுக்களில் நிபுணத்துவ விண்வெளி வீரராக அவர் இடம்பெற்றிருந்தார்.
அதற்கு முன்னர்,அப்பல்லோ 14 விண்வெளிப் பயணத்துக்கான உதவிக்குழு உறுப்பினராகவும், மனிதர்களை முதன்முதலில் விண்ணுக்கு அனுப்பிய ஸ்கைலேப்(Skylab) திட்டத்துக்கான காத்திருப்பு-விமானியாகவும் திகழ்ந்தவர்.
1984ஆம் ஆண்டு விண்கலத்தை விட்டு வெளிவந்து எந்தப் பிடிமானமும் இன்றி விண்வெளியில் உலா வந்த முதல் மனிதர் என்ற பெருமை அவரைச் சாரும்.
உலகையே வியக்கவைத்த அந்தத் தருணத்தின் புகைப்படங்கள் மூலம் திரு. மெக்கேண்டில்ஸ் உலகெங்கும் பிரபலமானார்.
பின்னணியில், இருள் சூழ்ந்த விண்வெளியும் அதில் தெள்ளிய நீலத்தில் பூமியின் ஆரமும்.
அந்தப் புகைப்படங்கள் திரு. மெக்கேண்டில்ஸுக்கு அழியாப் புகழை ஈட்டித்தந்தன.