Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்தில் பந்து! நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்

செவ்வாய் கிரகத்தில் பந்து! நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்

8 மார்கழி 2017 வெள்ளி 12:15 | பார்வைகள் : 12692


அமெரிக்காவின் நாசா அனுப்பிய விண்கலம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் பந்து வடிவ பொருள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
உலோகத்தில் ஆன அந்த பந்து செவ்வாய் கிரகத்தில் நடந்த போரை குறிப்பதாகவும், வேற்றுகிரகத்தில் உள்ள ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தை அழிக்க பயன்படுத்திய ஆயுதங்களில் இருந்து இந்த உலோகப்பந்து விழுந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
இந்த உலோக பந்து, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளமாக பார்க்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
 
இருப்பினும் இந்த பந்து புரியாத புதிராக இருப்பதாகவும், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்