வியாழன் கிரகத்தில் கடும் புயல்! ஜூனோ எடுத்த புகைப்படம்
3 மார்கழி 2017 ஞாயிறு 11:10 | பார்வைகள் : 9646
வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியதை நாசாவின் ஜூனோ விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு நாசா ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமரா வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
அதன்படி சமீபத்தில் ஜூனோ விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விழாயன் கிகத்தின் வடபகுதியில் புயல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் புயல் வீசும்போது மேகக் கூட்டங்கள் கலைந்து இருப்பதும் கருமேகங்களும் திரண்டுள்ளதும் தெளிவாக தெரிந்துள்ளது.