சந்திரனே பூமியை அழித்துவிடும்: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
7 ஐப்பசி 2017 சனி 08:01 | பார்வைகள் : 14136
பூமிக்கு அருகில் உள்ள சந்திரனே பூமியை அழிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இது குறித்த மேலும் விவரங்களை காண்போம்.
சந்திரன் ஒவ்வொரு வருடமும் தோராயமாக 4 செமீ அளவில் பூமியை விட்டு நகர்ந்து செல்கிறது. ஆனால் இந்த நகர்தலின் முடிவில் பூமியை நோக்கி ஒரு கடுமையான பாய்ச்சலை சந்திர நிகழ்த்த கூடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமியின் கடல்களில் அலைகள் ஏற்பட காரணமான சந்திரனின் ஈர்ப்பு விசையால் சந்திரன் பூமியை நோக்கி வரும். இதன் முடிவில் சந்திரன் பூமிக்கு இடையே மோதல் நிகழும் என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்த பூமி, சந்திரன் மோதல் நிகழ 65 பில்லியன் ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் சூரியனி ஆயுள் காலம் முடிந்து சூரிய மண்டலத்தின் பெரும்பகுதியை அழிந்து இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan